விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: -
'ஓம்' எனும் ஓங்கார வடிவமாக விளங்கும் விநாயகப் பெருமான் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளம் கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சகல கணங்களுக்கும் தலைவனாகிய கணபதியாய், தடைகளைத் தகர்க்கும் விக்னேஸ்வரராய் விளங்கும் விநாயகப் பெருமானை வணங்கினால், வாழ்வில் வளம் பெருகும், அறிவு மிகும், துன்பங்களுக்கு காரணமான வினைகள் அகலும், தொடங்கிடும் நற்காரியங்கள் தங்குதடையின்றி சிறப்புடன் நடைபெறும் என்பது மக்களின் இறை நம்பிக்கையாகும். ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதி அன்று முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி திருநாளை மக்கள் பக்தியுடன் கொண்டாடி மகிழ்வார்கள்.
நினைத்ததையெல்லாம் தரவல்ல கற்பகத்தரு போன்று வேண்டுவோர்க்கு வேண்டுவன அளிக்கும் வேழமுகத்தான் அருளால், உலகில் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும் வளமும் பெருகட்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Write comments