கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, .
திருவனந்தபுரத்தில் உள்ள பா.ஜ.க அலுவலகம் மீது நள்ளிரவில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அலுவலகத்தின் நுழைவு வாயில் சேதம் அடைந்தது என்று திருவனந்தபுரம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட போது பா.ஜ.க தொண்டர்கள் 4 பேர் கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்ததால் அவர்கள் யாரும் காயம் அடையவில்லை. பா.ஜ.கவின்க மாநில தலைவர் கும்மனம் ராஜசேகரன் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய 45 நிமிடங்கள் கழித்து குண்டு வெடித்து உள்ளது என்று பா.ஜ.க வட்டார தகவல்கள் தெரிவித்து உள்ளன.
பா.ஜ.கவின் புதிய அலுவலக கட்டிடத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இச்சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் பிணராயி விஜயன் தலைமையில் ஆட்சி அமையப்பெற்ற நாட்களிலிருந்தே அம்மாநிலத்தில் கொலை, வன்முறை சம்பவங்கள், குண்டுவெடிப்புகள் அதிக அளவில் நடந்து வருகிறது. அதிலும் குறிப்பாக கண்ணூர் மாவட்டத்தில் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் மற்றும் சி.பி.எம் கட்சியினரிடையே கடும் மோதல் நிலவி வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் இரு ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களை சி.பி.எம் கட்சியினர் கொலை செய்துள்ளனர். 3 நாட்களுக்கு முன் நடைபெற்ற தாக்குதலில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விரு கட்சிகளுக்கிடையே மோதல் நடைபெற்றுவருவதால் ஆளுங்கட்சிக்கு இதில் தொடர்பு இருக்குமா என்கிற ரீதியிலும் காவல்துறையினர் இவ்வழக்கை விசாரித்து வருகின்றனர்.

No comments:
Write comments