Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 3, 2016

செல்வந்தர்களின் செல்லப்பிள்ளையாக மாறிய ஹோட்டல்!

 

சர்வதேச அளவில் செல்வந்தர்கள் விரும்பும் ஹோட்டல்கள் பட்டியலில், நியூயார்க்கில் உள்ள சஹாரா இந்தியா பரிவார் கம்பெனிக்கு சொந்தமான ‘தி பிளாசா’ முதலிடத்தை பிடித்துள்ளது. ‘நியூ வேர்ல்டு வெல்த்’ ஆய்வின்படி உலகின் மிகப் பெரும் செல்வந்தர்கள் தங்க விரும்புவதற்குரிய ஹோட்டல் பட்டியலில் ‘தி பிளாசா’ முதலிடம் வகிக்கிறது. சஹாரா கம்பெனிக்கு லண்டனில் ‘கிராஸ் வெனார் ஹவுஸ்’, நியூயார்க்கில் ‘தி பிளாசா’, ‘ட்ரீம் நியூயார்க்’ என மூன்று ஹோட்டல்கள் உள்ளன. இந்த மூன்று ஹோட்டல்களிலும் மேலும் முதலீடு செய்ய சஹாரா குழுமம் முயற்சித்து வருகிறது. லண்டனில் உள்ள மாண்டரின் ‘ஓரியண்டல் ரெசிடன்ஸ்’ இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. நியூயார்க்கில் உள்ள ‘செயிண்ட் ரெஹிஸ் ரெசிடன்ஸ்’ மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. செஷல்ஸ் தீவில் உள்ள ‘போ சீசன்ஸ் பிரைவேட் ரெசிடன்ஸ்’ நான்காவது இடத்திலும் ‘ஓடோன் டவர் ரெசிடன்ஸ்’ ஐந்தாவது இடத்திலும் உள்ளது.

நியூ வேர்ல்டு வெல்த் ஒவ்வொரு வருடமும் அதிக சொத்து மதிப்பு கொண்ட பணக்காரர்களிடம் அவர்களின் விருப்பங்களைப் பற்றி கேட்டறியும். பணக்காரர்கள் பல்வேறு வசதிகளை முன்வைத்து ஹோட்டல்களை தேர்ந்தெடுக்கிறார்கள். அறைகளின் சுத்தம், சேவை, நீச்சல் குளம், பொழுதுபோக்கு அம்சங்கள், உணவு விடுதி, பாதுகாப்பு ஆகிய பல்வேறு காரணங்களை வைத்து ஹோட்டலுக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். அந்த வகையில் ‘தி பிளாசா’ ஹோட்டல், அத்தனை வகையான சேவைகளிலும் முதலிடம் வகிக்கிறது. இந்த ஹோட்டலின் இன்டீரியர் டிசைன், இதன் அழகுக்கு அழகு சேர்க்கிறது.

மியூஸிக் டைரக்டர் கேய் தாம்ப்ஸன், பாப் பாடகி ஷிர்லி வெரோனிகா உள்ளிட்ட பல பிரபலங்கள் இங்கு தங்கியிருக்கின்றனர். தற்போது, அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் டொனால்டு டிரம்புக்கும் அவரது இரண்டாவது மனைவி மரியாவுக்கும் இங்கு திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic