மும்பையிலுள்ள சித்தி விநாயகர் கோயில் மிகவும் புகழ்பெற்றது. சிறப்பான கட்டுமானப்பணி மூலம் கண்கவர் கட்டடமாக உயர்ந்து நிற்கும் அக்கோயில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் ஈர்க்கத் தவறியதில்லை. அதனால்தான், சாதாரணமாக தனது படங்களில் விநாயகருக்கு பாடல் வைக்கும் அஜித், மும்பைக்குச் சென்று ‘வேதாளம்’ படத்தில் ‘சித்தி விநாயகா’ என்ற பாடலை வைத்தார். ஆனால், இப்போது அந்தக் கோயிலின் நிர்வாகம் ஈர்க்க நினைத்திருப்பது இந்தியாவின் மிக செல்வாக்கானதும், செலவாகக்கூடியதுமான அமிதாப் பச்சனின் குரலை.
சித்தி விநாயகர் கோயிலில் ஒலிக்கும் பாட்டை ரெக்கார்ட் செய்து பல வருடங்கள் ஆகிவிட்டதால், பக்தர்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும்விதமாக அமிதாப் பச்சனின் குரலில் அந்த பாடலைப் பதிவு செய்யக் கேட்டிருக்கின்றனர். இதற்குச் சம்மதித்த அமிதாப் பச்சன், இந்த பாடலின் இசை வேலைகளை மட்டும் கோயில் நிர்வாகத்திடம் கொடுத்துவிட்டார். மற்றபடி பாடுவது, ரெக்கார்டிங் என அனைத்தும் அமிதாப் பச்சனின் பொறுப்பில் நடைபெறுகிறது. இந்தப் பாடலை சிடி மற்றும் ஆன்லைனில் ரிலீஸ் செய்யவும் முடிவெடுத்திருக்கிறார். அத்துடன் இந்தப் பாடலை வீடியோவாகவும் பதிவு செய்து, வீடியோ வலைதளங்களில் அப்லோட் செய்யவிருக்கிறார் அமிதாப்.

No comments:
Write comments