இந்தியாவில் வெங்காய உற்பத்தி இதுவரை இல்லாதளவுக்கு 21 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
தக்காளி உற்பத்தியும் சென்ற ஆண்டைவிட 12 சதவிகிதம் அதிகரித்து 18.4 மில்லியன் டன்னாக உள்ளது. ஆனால் உருளைக்கிழங்கு உற்பத்தி சென்ற ஆண்டைவிட 9 சதவிகிதம் சரிந்து 43.7 மில்லியன் டன்னாக உள்ளது.
இந்தியாவில் மஹாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம், குஜராத், பீஹார், ஆந்திரா, ராஜஸ்தான், ஹரியானா மற்றும் தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் வெங்காயம் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. வெங்காய உற்பத்தி குறித்து விவசாய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வருடம் வெங்காய உற்பத்தி சென்ற ஆண்டைவிட 11 சதவிகிதம் அதிகரித்து 21 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கடந்த 2013-14ஆம் ஆண்டில் வெங்காய உற்பத்தி 19.4 மில்லியன் டன்னாக இருந்தது. ஆனால் 2014-15 ஆம் ஆண்டு போதுமான மழையில்லாததால் உற்பத்தி சரிந்து 18.92 மில்லியன் டன்னாக குறைந்தது. ஆனால், இந்த ஆண்டு நல்ல மழை இருந்ததால் வெங்காய உற்பத்தி 21 மில்லியன் டன்னாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது என்று தேசிய தோட்டக்கலை ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ஏ.கே.சிங் தெரிவித்துள்ளார்.
வெங்காய உற்பத்தி அதிகரித்துள்ளதால், ஒரு கிலோ வெங்காயம் 7 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால் இதே காலகட்டத்தில் சென்றாண்டு அதன் விலை ரூ.45 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் காய்கறிகளின் உற்பத்தி சென்ற ஆண்டைப்போலவே 167 மில்லியன் டன்னாக உள்ளது. ஆனால் பழங்களின் உற்பத்தி சென்ற ஆண்டைவிட 2 சதவிகிதம் அதிகரித்து 91 மில்லியன் டன்னாக உள்ளது. அதேபோல, மசாலா வகைகளின் (நறுமணப் பொருட்கள்) உற்பத்தி சென்ற ஆண்டைவிட 4 சதவிகிதம் அதிகரித்து 6 மில்லியன் டன்னாக உள்ளது.

No comments:
Write comments