Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 5, 2016

விபச்சாரியை தொடர்ந்து மாயாவதியை 'நாய்' என்று விமர்சனம்‍!


மாயாவதியை விபச்சாரியோடு ஒப்பிட்டு பேசி பெரும் சர்ச்சைக்குள்ளான முன்னாள் பா.ஜ.க துணைத்தலைவர் மீண்டும் மாயாவதியை விமர்சித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பா.ஜ.கவின் உத்திரபிரதேச மாநில துணைத்தலைவர் கடந்த மாதம் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மாயாவதியை விபச்சாரியோடு ஒப்பிட்டு பேசியது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. விபச்சாரியாவது காசை வாங்கிவிட்டால் என்றால் சொன்ன வார்த்தையை காபாற்றுவாள், ஆனால் மாயாவதி விபச்சாரியை விட மோசமானவர் என பேசினார். இதனால் அம்மாநிலத்தில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. பா.ஜ.க தலைமையும் தயாசங்கர் சிங்கை 6 வருடத்திற்கு கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தது.

பா.ஜ.க தலைவரின் இந்த கருத்தை எதிர்த்து மாநிலம் முழுவதும் பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அறுவறுக்கத்தை வார்த்தைகளை கொண்டு விமர்சித்த பா.ஜ.க தலைவர் தலைமறைவானார். இருந்த போதிலும் சில நாட்களில் காவல் நிலையத்தில் சரணடனைய அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

தற்போது தயாசங்கர் சிங் மீண்டும் மாயாவதியை விமர்சித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் .இந்த முறை அவரை "நாய்" என்று பேசியுள்ளார். மாயாவது பணத்திற்கு பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் நாய் என்று விமர்சித்துள்ளார். மேலும் மாயாவதியின் பல்வேறு ஊழக் குற்றச்சாட்டுகளையும் அவர் கூறி வருகிறார். தயாசங்கர் சிங்கின் இத்தகைய கருத்தால் மேலும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic