ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் தலைவன் சயீத் சலாவுதீனை புர்கான் வானிக்கு ஏற்பட்ட கதிதான் உனக்கும் ஏற்படும் என எச்சரித்துள்ளது பா.ஜ.க.
கஷ்மீரில் தொடர்ந்து நடைபெற்றுவரும் வன்முறைகளை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிரவமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் அமைதியை சீர்குலைக்கும் வகையில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் தலைவன் சயீத் சலாவுதீன் நேற்று ஒரு செய்தியை வெளியிட்டுள்ளான். அதில் கஷ்மீருக்குள் தற்கொலைப்படைகளை அனுப்பி சுடுகாடாக மாற்றுவோம் என தெரிவித்திருந்தான்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் செய்தி வெளியிட்டுள்ள பா.ஜ.கவின் செய்தி தொடர்பாளர் ஷாய்னா கூறியிருப்பதாவது "கஷ்மீரை சுடுகாடாக மாற்றுவோம் என எவராவது மிரட்டும் தோணியில் பேசினால் அவருக்கு நாங்கள் பதில் எச்சரிக்கை விடுக்கிறோம். புர்கான் வானிக்கும் ஏற்பட்ட கதிதான் அவர்களுக்கும் ஏற்படும். ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பு ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருக்கிற அரசு ஒன்றும் கையாளாகாத அரசு இல்லை. எங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படுமெனில் திருப்பி அடிப்பதற்கு தயாராகவே உள்ளோம். இங்கு வன்முறையை தூண்டும் பிரிவினை வாதிகளுக்கு தண்டனை கொடுப்பதற்கு எங்களுக்கு வெகு நேரம் ஆகாது." என தெரிவித்தார்.

No comments:
Write comments