Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 8, 2016

அமித்ஷா பங்கேற்ற கூட்டத்தில் அடிதடி!


குஜராத்தில் பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்ற கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டு வன்முறை சம்பவம் நிகழ்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத்தில் பட்டிதர் சமூக தலைவர்களுடனான சந்திப்பு நடைபெற்றது. இதில் பா.ஜ.க தரப்பில் அதன் தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் பங்கேற்க வந்த ஹர்திக் படேலின் ஆதரவாளர்கள் குழப்பத்தை ஏற்படுத்த அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இருக்கைகள் அனைத்தும் உடைத்து நாசமாக்கப்பட்டது.

நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது ஹர்திக் படேலின் ஆதரவாளர்கள் கோஷம் போட துவங்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்ட அவர்களுக்கு பா.ஜ.கவினருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது, இதனால் அங்கிருந்த இருக்கைகள் அனைத்தும் உடைத்து நாசமாக்கப்பட்டது.

முன்னதாக குஜராத் மாநிலத்தில் புதிதாக முதலமைச்சர் பதவியை ஏற்ற விஜய் ரூபானி தலைமையிலான அரசவையில் இடம்பெற்றிருக்கும் படேல் சமூகத்து அமைச்சர்களை சந்தித்து வாழ்த்து கொடுப்பதற்கான நிகழ்ச்சிக்கு பா.ஜ.க ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic