தமிழகத்துக்கு காவேரி நீர் திறந்து விட்டதைக் கண்டித்து கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது தமிழர்கள் தாக்கப்பட்டனர். இதனை கண்டித்து தமிழகத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் காவேரி நீர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிடுவது சாத்தியமில்லை என்று கர்நாடக பா.ஜ.க தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இதுகுறித்து எடியூரப்பா செய்தியாளர்களிடம் கூறுகையில், காவேரி விவகாரத்தில் தோல்வியடைந்த மாநில அரசு, மக்களின் கவனத்தை திசைதிருப்ப முயற்சி செய்கிறது. கர்நாடக அரசு இதனை வைத்து அரசியல் செய்து வருகிறது. இந்த சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி காவேரி விவகாரத்தில் தலையிடுவது சாத்தியமில்லை. காவேரி விஷயத்தில் நீதிமன்றம் மூலமாக நீதியை பெற முயற்சி செய்ய வேண்டும்.
கர்நாடக மாநிலத்தின் அனைத்து கட்சி கூட்டத்தில் மூத்த வழக்கறிஞர் மோகன் கடரகி கர்நாடக முதல்வர், காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலையில் பேசும்போது, இவ்விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் பிரதமரோ, மத்திய அரசோ தலையிட முடியாது என்று தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். கர்நாடக அரசு சட்டம்-ஒழுங்கை கடைபிடிப்பதில் அக்கறை செலுத்த வேண்டும் என்பதை நான் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தவிர கர்நாடகாவில் உள்ள மற்ற கட்சிகள் பிரதமர் இந்த விசயத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இதேபோன்று தமிழகத்திலும் பெரும்பாலான கட்சிகள், பிரதமர் காவேரி விவகாரத்தில் தலையிட வேண்டும் என விருப்பம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments