இந்திய பிரதமர் நரேந்திரமோடி இன்று தனது 66-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி குஜராத் மாநிலம் காந்திநகரில் வசிக்கும் தனது தாய் ஹீராபென் மோடியிடம் சென்று ஆசிர்வாதம் பெற்றார். பாதுகாவலர் துணையின்றி தனி காரில் சென்ற பிரதமர் மோடி தனது தாய் இல்லத்துக்கு சென்றார் என்பது கவனிக்கத்தக்கது.
முன்னதாக நேற்று மாலை குஜாராத் மாநிலம் சென்ற பிரதமர் மோடிக்கு, அகமதாபாத் விமான நிலையத்தில் குஜராத் முதல் மந்திரி விஜய் ரூபானி, கவர்னர் ஓபி கோலி, மாநில பாரதீய ஜனதா தலைவர் ஜிது வாகானி உள்ளிட்ட நூற்றுகணக்கான பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். உற்சாக வரவேற்புக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி நேற்று ராஜ்பவன் சென்று தங்கினார்.

No comments:
Write comments