Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 4, 2016

அன்னை தெரசாவிற்கு புனிதர் பட்டம் - விழாக்கோலம் பூண்ட வாட்டிகன்..!


வாடிகன் நகரில் இன்று நடைபெறும் விழாவில் அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது.

உலகம் முழுவதும் இருந்து வந்து குவிந்துள்ள ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மத்தியில் போப் பிரான்சிஸ் அன்னை தெரசாவை புனிதராக அறிவிக்கிறார். அல்பேனியாவில் பிறந்த அன்னை தெரசா கொல்கத்தா வந்து "மிஷினரி ஆப் சாரிட்டி" என்ற அறக்கட்டளை மூலம் அங்குள்ள ஏழைகளுக்கு சேவை செய்து வந்தார். இந்த நிலையில் இறப்புக்கு பின் அவர் 2 அற்புதங்கள் நிகழ்த்தியதற்காக தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்க முடிவு செய்யப்பட்டது. மேற்கு வங்கத்தை சேர்ந்த மலைவாழ் பெண் மோனிகா பெஸ்ராவின் வயிற்றில் இருந்த கட்டியை தெரசா தன் அற்புத சக்தியால் நீக்கியதற்காகவும், பிரேசிலை சேர்ந்த ஒருவரின் நோயை குணப்படுத்தியது என 2 அற்புதங்களை அன்னை தெரசா தனது இறப்புக்கு பின் செய்ததாக போப் ஆண்டவர் பிரான்சிஸ் கடந்த மார்ச் மாதம் அங்கீகாரம் தந்தார்.

இதையடுத்து தெரசாவை புனிதராக அறிவிக்கும் விழா வாடிகன் நகரில் இன்று கோலாகலமாக நடக்கிறது. இதையொட்டி கொல்கத்தாவிலுள்ள அன்னை தெரசா சேவை செய்த மிஷினரி ஆப் சாரிட்டி அமைப்பின் தலைவி மேரி பிரேமா தலைமையில் 50க்கும் மேற்பட்ட கன்னியாஸ்திரிகள் கத்தோலிக்கர்களின் புனித தலமான வாடிகன் சென்றுள்ளனர். கொல்கத்தா ஆர்ச் பிஷப் தாமஸ் டிசோசோ இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 45 பிஷப்புகளுடன் வாடிகனில் முகாமிட்டுள்ளார். பல்வேறு நாடுகளை சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் லட்சக்கணக்கானோர் அங்கு குவிந்துள்ளனர். வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் 12 பிரதிநிதிகள் குழுவுடன் சென்றுள்ளார். மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் வாடிகனுக்கு சென்று விட்டனர்.

விழாக்கோலம் பூண்டுள்ள வாடிகனில் இன்று நடைபெறும் விழாவில் போப் பிரான்சிஸ் அன்னை தெரசாவை புனிதராக அறிவிக்கும் சடங்கு நடக்கிறது. அதே நேரத்தில் கொல்கத்தாவில் உள்ள  இல்லத்திலும் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்படுகிறது. இதில் ஏராளமான ஏழைகளுடன் கன்னியாஸ்திரிகள் பங்கேற்கின்றனர். அன்னை தெரசாவிற்கு புனிதர் பட் டம் வழங்குவதன் மூலம் இந்தியர்கள் ஒவ்வொருவரும் பெருமை அடைகிறார்கள் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic