Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 4, 2016

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் நாடு கடத்தப்படவுள்ளார்...!


போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்த நிலையில், இந்திய காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரை இலங்கைக்கு நாடு கடத்த முடிவுசெய்துள்ளது.

விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் கடந்த வியாழக்கிழமை போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி ஜெர்மன் நாட்டிற்கு செல்ல முயற்சித்த போது புனே விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குறித்து புனே காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டபோது, அவர் இந்தியாவில் நடந்த பல குற்றச் செயல்களுடன் தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது.

சுதன் சுப்பையா என்ற இந்த சந்தேக‌ நபர் மாரிமுத்து என்ற பெயரில் 2005 ஆம் ஆண்டு வரை விடுதலைப்புலிகள் அமைப்பில் செயல்பட்டு உறுப்பினராக இருந்துள்ளார்.

சந்தேக நபரை நாடு கடத்த தற்காலிக வீசா அனுமதியை வழங்குமாறு புனே காவல்துறையினர், இந்தியாவில் உள்ள இலங்கை தூதரகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனடிப்படையில் சந்தேக நபர் அடுத்த வாரம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட உள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic