Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 9, 2016

முற்றிலுமாக முடங்கியது கர்நாடகம்..!


காவேரியில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுவதைக் கண்டித்து கர்நாடாகாவில் பந்த் தொடங்கியுள்ளது.

கர்நாடக மாநில விவசாயிகள் சங்கம், கரும்பு விவசாயிகள் சங்கம், கன்னட சேனை, நடிகர் ராஜ்குமார் ரசிகர் மன்றம், கர்நாடகா ரக்சன வேதிகே, ஜெய் கர்நாடகா, பெங்களூர் மாநகராட்சி, திரைப்பட சங்கம், வாகன உரிமையாளர்கள் சங்கம், பள்ளி - கல்லூரிகள் சங்கம், பெட்ரோல் நிலைய உரிமையாளர் சங்கம், கன்னட நடிகர்கள் சங்கம், மாநில சிறு தொழில் சங்கம் உள்பட சுமார் 2 ஆயிரம் சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு முழு அடைப்புப் போராட்டத்தை ஆதரித்துள்ளன.

அனைத்துத் தரப்பினரும் போராட்டத்தில் குதித்ததால் இன்றைய அவர்களது முழு அடைப்பு திட்டமிட்டப்படி வெற்றிகரமாக நடந் தது. மாநில சாலை போக்கு வரத்துக் கழகத்துக்கு சொந்த மான 23 ஆயிரம் பஸ்கள் ஓடவில்லை. 60 ஆயிரத் துக்கும் மேற்பட்ட வாடகை கார்களும் இயக்கப் படவில்லை. லாரிகள், ஆட் டோக்களும் ஓடவில்லை.

பந்த் காரணமாக பெங்களூரு நகரம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் அவை மூடிக் கிடக்கின்றன. பல நிறுவனங்களில் ஊழியர்கள் வீடுகளிலிருந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள நிறுவனங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து எலக்ட்ரானிக் சிட்டி செய்தித் தொடர்பாளர் கூறுகையில் ஒரு நிறுவனமும் இன்று திறக்கப்படவில்லை. அனைத்தும் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன, தமிழ் தொலைக்காட்சி சேனல்களையும் கன்னட அமைப்பினரின் மிரட்டல் காரணமாக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் முடக்கி வைத்து விட்டன
இதனால் டாடா ஸ்கை போன்ற டிஷ் ஆன்டனா சர்வீஸை வைத்திருப்பவர்கள் மட்டுமே தமிழ் சேனல்களைப் பார்க்க முடிகிறது.

கர்நாடகா முழு அடைப்பு போராட்டத்தை யட்டி தமிழ கத்தில் இருந்து ஓசூர் வழியாக கர்நாடகா செல்லும் அனைத்து  தமிழக அரசு பஸ்களும்  ஓசூர் அருகே உள்ள தமிழக எல்லையான ஜூஜூவாடி எல்லையில் நிறுத்தப்பட்டன.

இதுதவிர லாரிகள், வேன்கள், கார்கள்  உள்பட  எந்த வாகனங்களும் கர்நாட காவுக்கு செல்லவில்லை.இதனால்  ஓசூரில்  லாரிகள், வேன்கள்,  கார்கள்,  அரசு மற்றும்  தனியார் பஸ்கள் நீண்ட வரிசையில் சாலையோரம்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.




 

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic