சுவாதி படுகொலை சம்பவத்தையடுத்து அனைவராலும் அறியப்பட்டவராக இருக்கும் தமிழச்சி, சுவாதி குறித்த கொலை சம்பவம் தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்துள்ளார்.இவ்வளவு விசயங்களை தெரிந்து வைத்துள்ள தமிழச்சிக்கு இன்னும் முழுமையான தகவல்கள் தெரியக் கூடும் என தெரிகிறது. இந்நிலையில், தமிழச்சி முறைப்படி பிரான்ஸ் காவல்துறையினரிடமோ அல்லது பிரான்ஸ் நாட்டில் உள்ள இந்தியத் தூதரகத்திலோ இந்த விசயங்களை தெரிவிக்க வேண்டும்.
மாறாக அவர் சமூக வலைதளங்களில் இது குறித்த கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இது குறித்து பிரான்ஸ் காவல்துறையினரின் கண்காணிப்பில் தமிழச்சி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தமிழச்சியின் பின்னணியில் இயங்கும் அனைவரும் விசாரணை வலயத்தில் இருப்பதாக பிரான்ஸில் வாழும் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தமிழகத்துக்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும், தமிழக காவல்துறையினரை சந்தேக வட்டத்துக்குள் கொண்டு வந்துள்ள தமிழச்சி நாடுகடத்தப்படலாம் எனவும் கூறப்படுகின்றது.
No comments:
Write comments