Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 19, 2016

உரி தாக்குதல் பாக் திட்டவட்டமாக மறுப்பு!


ஜம்மு கஷ்மீர் உரி இராணுவ தலைமையகத்தில் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் பாகிஸ்தானிற்கு எந்த தொடர்பும் இல்லை என அந்நாட்டு அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

ஜம்மு கஷ்மீர் மாநிலம் உரியில் அமைந்திருக்கும் இந்திய இராணுவ தலைமையகத்தின் மீது பயங்கரவாதிகள் நேற்றைய தினம் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்கள் 17 பேர் உயிரிழந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட நாங்கு பயங்கரவாதிகளும் சுட்டு கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரதமர் நரேந்திர மோடி இந்த தாக்குதல் நடத்தியவர்களை சும்மா விடப்போவதில்லை என எச்சரித்தார்.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசே காரணம் என்றும், தொடர்ந்து இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாத ஊடுருவல்களை ஆதரித்து வருவதாகவும் பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு என கடுமையாக விமர்சித்தார். இதற்கு பாகிஸ்தான் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துற அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நபீஸ் ஜகரிய்யா தொலைகாட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதவாது, "இந்தியா எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டுக்களை பாகிஸ்தான் மீது கூறியுள்ளது. உரி தாக்குதலுக்கும் பாகிஸ்தானிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்தியாவில் எந்த பயங்கரவாத தாக்குதல் நடந்தாலும் உடனே அவர்கள் பாகிஸ்தானை குறை சொல்வதைத்தான் ஆண்டாண்டுகாலமாக வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் பலமுறையும் இது பொய் என எங்களது அரசு நிரூபித்துள்ளது" என ஜகரியா தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு முறை பாகிஸ்தான் அரசு மீது இந்தியா குற்றஞ்சாட்டும்போது அதற்கான ஆதாரத்தை நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால் இது வரை இந்தியா எந்த ஒரு வலுவான ஆதாரத்தையும் நம்மிடம் கொடுத்ததில்லை. கஷ்மீர் பிரச்சனையை திசைத்திருப்ப இந்தியா பல்வேறு குறுக்கு வழிகளை கையாண்டு வருகிறது என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic