கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தமிழகத்தைச்சேர்ந்த பெண் தெரு நாய் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தைச்சேர்ந்த ஒரு பெண் தனது கணவர் மற்றும் 6 பிள்ளைகளுடன் கடந்த வாரம் கேரள மாநிலம் கோழிக்கோடு சென்றிருக்கிறார். மன்னூர் வளவு என்னும் பகுதியில் அவரை தெரு நாய்கள் பயங்கரமாக கடித்து குதறியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைகாக அவர் கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
நேற்று அவர் சிகிச்சை பலனளிகாமல் உயிரிழந்துள்ளார். ரேபீஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கலாமா என்பதை மருத்துவர்களின் அறிக்கை வந்த பின்னரே கூற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தெரு நாய்களின் அட்டகாசம் அதிகம் இருப்பதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதற்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் கேரள அரசு தெரு நாய்களை கொல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதே சமயம் இச்செயலுக்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி கடும் கண்டனத்தை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments