Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 2, 2016

தனியார் சட்டத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடக்கூடாது...!‍


புதுடெல்லி: முஸ்லிம் தனியார் சட்டத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடக்கூடாது என முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் மூன்று தலாக்(விவாகரத்து) உச்ச‌ நீதிமன்றத்திற்கு பதில் கொடுத்துள்ளது.

இந்தியாவில் பின்பற்றப்பட்டும் தனியார் சட்டங்கள் பெரும்பான்மை மதங்களில் மத நூல்களிலிருந்து உருவாக்கப்பட்டது. சமூக சீர்த்திருத்தம் என்கிற பெயரிலோ, காலத்திற்கு ஏற்ப சட்டங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்கிற பெயரிலோ அதனை மாற்றுவதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது. அதேபோல் இச்சட்டத்தில் தலையிடுவதற்கு உச்ச நீதிமன்றத்திற்கு எந்த அதிகாரமும் கிடையாது. அவ்வாறு தலையிடுவது என்பது இந்திய அரசியலமைப்புச்சட்டம் வழங்கியிருக்கின்ற உரிமைகளை பரிப்பதாகும் என தெரிவித்துள்ளது.

நீதிமன்றங்கள் தங்களுடைய சொந்த விளக்கங்களை இந்த தனியார் சட்டத்திற்குள் திணிக்க இயலாது என முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் எந்த மனுமீதான் விசாரணையின் அடிப்படையில் இல்லாமல் சொந்த கருத்தின் அடிப்படையில் மூன்று தலாக் விடுவது பெண்கள் உரிமைகளை பரிப்பதாகும் என கருத்து தெரிவித்திருந்தது. இத்தகைய கருத்துக்கள் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தவே வழி வகுக்கும் என மறுப்பு தெரிவித்துள்ளது.

முன்னர் முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் சட்ட திட்டங்களை ஆராய்வதற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த கமிட்டிக்கும் நீதிமன்றம் தடைவிதித்துள்ளதை சுட்டுக்காட்டியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கூறும்போது, "முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் இன்னமும் பழைய தீர்ப்பையே உதாரணம் காட்டி வருகிறது. இத்தகைய நடவடிக்கையை முன்னால் பாம்பே உயர் நீதிமன்ர நீதிபதி இந்த தீர்ப்பை வெளியிட்டார்." என தெரிவித்தார்.

இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு சரியான பார்வை இருப்பதாகவும், தனியார் சட்டத்தில் மாற்ற கொண்டு வரப்படவேண்டும் என்கிற பட்சத்தில் அதனை பரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் தலையிடுவதற்கு அனுமதி உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இது தொடர்பாக இன்னும் பல்வேறு கட்ட அமர்வுகள் நடத்தப்படவேண்டியுள்ளது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic