Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 15, 2016

பிரிவினைவாதிகளுக்கு அரசு சலுகை விசயத்தில் தலையிட முடியாது! - உச்ச நீதிமன்றம்


காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு அரசு செலவில் பாதுகாப்பு அளிக்கும் விஷயத்தில் தலையிட மாட்டோம் என்று கூறி, அதுதொடர்பான மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

வக்கீல் எம்.எல்.சர்மா என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–

காஷ்மீரில் உள்ள ஹூரியத் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த பிரிவினைவாத தலைவர்களுக்கு அரசு செலவில் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, மத்திய அரசு, காஷ்மீர் மாநில அரசுக்கு நிதிஉதவி வழங்குகிறது. அவர்களின் பாதுகாப்பு, அவர்கள் ஓட்டல்களில் தங்குவது உள்ளிட்ட செலவுகளுக்கு ரூ.300 கோடி செலவிடப்படுகிறது.

அவர்கள் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள். ஆகவே, அவர்களுக்கு அரசு செலவில் பாதுகாப்பு அளிப்பதை சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும். பாதுகாப்பை கைவிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:–

பாதுகாப்புக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ காஷ்மீருக்கு நிதிஉதவி அளிப்பது மத்திய அரசின் தனிப்பட்ட அதிகாரம் ஆகும். யாருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும், எத்தகைய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நாங்கள் கூற முடியாது.

ஒருவரது உயிருக்கு இருக்கும் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு அரசு பாதுகாப்பு அளிக்கிறது. தேச பாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கும் விஷயத்தை மத்திய அரசிடமும், ராணுவத்திடமும் விட்டுவிடுவதே நல்லது. நாட்டுக்கு எது நல்லது என்று தீர்மானிப்பதில் அவர்கள்தான் சிறந்த நீதிபதிகள்.

இது, தேசத்தின் உணர்வுப்பூர்வமான விவகாரம். இதில் எங்களுக்கு மிகக்குறைவான வேலையே இருக்கிறது. ஆகவே, இதில் நாங்கள் தலையிட முடியாது. இதுபோன்ற பிரச்சினைகளுக்கு பொதுநலன் மனு தாக்கல் செய்வது ஏற்புடையது அல்ல. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

மேலும், பிரிவினைவாதிகளை ‘பயங்கரவாதிகள்’ என்றும், பயங்கரவாதத்தை அரசியல்வாதிகள் ஊக்குவிக்கிறார்கள் என்றும் வக்கீல் எம்.எல்.சர்மா கூறியதற்கு நீதிபதிகள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.

‘ஒருவர் பயங்கரவாத குற்றத்துக்காக கைது செய்யப்படாவிட்டாலோ, தண்டிக்கப்படாவிட்டாலோ அவரை பயங்கரவாதி என்று முத்திரை குத்தக்கூடாது. இதை கோர்ட்டில் சொல்வதை நாங்கள் சகித்துக் கொள்ள மாட்டோம்’ என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic