Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 16, 2016

ஜப்பான் நகர டைஜியில் நடத்தப்படும் கொடூர வேட்டை

 

ஜப்பானின் பிரபலமான டால்பின் வேட்டை டைஜியில் நடத்தப்படுகிறது. இங்குள்ள மலைக் குகைப் பகுதியில் நூற்றுக்கணக்கான டால்பின்கள் தினமும் வேட்டையாடப்படுகின்றன.

செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை 6 மாதங்கள் டால்பின் வேட்டை தொடர்கிறது. ஒவ்வொரு பருவத்துக்கும் 2 ஆயிரம் டால்பின்கள் கொல்லப்படுகின்றன. இடப்பெயற்சி செய்யும் டால்பின்கள் கூட்டமாக அந்தப் பகுதியைக் கடக்க முயலும்போது, வலையால் தடுக்கப்பட்டு, மீனவர்களின் ஈட்டிகளுக்குப் பலியாகின்றன.

இப்படிச் செய்வதால் டால்பின்களின் உளவியல் பாதிக்கப்படுகிறது. குட்டிகளையும் இளம் டால்பின்களையும் கொல்லாமல் விட்டுவிட்டாலும் அவை மன அழுத்தத்தில் விரைவில் மரணத்தைச் சந்தித்துவிடுகின்றன. டைஜி டால்பின் வேட்டையை லூயி பிசியோஸ் ஆவணப்படமாக எடுத்து வெளியிட்டார்.

அதற்குப் பிறகு உலகம் முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. விலங்குகள் நல ஆர்வலர்களும் வேட்டையைத் தடுக்கப் போராடினர். ஆனாலும் தடுக்க இயலவில்லை. பல கோடி பணம் புழங்கும் தொழிலாக மாறிவிட்டதும் ஜப்பானிய அரசாங்கம் ஆதரவு அளிப்பதும்தான் இதற்குக் காரணம்.

உடலுக்குத் தீங்கிழைக்கும் ரசாயனங்கள் கலக்கப்பட்ட டால்பின் இறைச்சியைச் சாப்பிட வேண்டாம் என்ற விழிப்புணர்வு மூலம், ஜப்பானிய மக்களிடம் டால்பின் இறைச்சிக்கான ஆர்வம் குறைந்து வருகிறது. ஆனால் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் டைஜி டால்பின் இறைச்சிகளை வாங்குகிறார்கள்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic