Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 16, 2016

விக்னேஷின் மரணம் வலியை தருகிறது - சீமான்


சென்னையில் நாம் தமிழர் கட்சி பேரணியில் கலந்து கொண்டு தீக்குளித்து சிகிச்சை பலனின்றி இறந்த அக்கட்சியின் தொண்டர் விக்னேஷ் குடும்பத்திற்கு அக்கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பேரணியில் கலந்துகொண்டு தீக்குளித்த விக்னேஷ் சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் மருத்துவமனைக்கு வந்த சீமான் பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது "விக்னேஷ் மரணம் மனவலையை தருகிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன், தொண்டர்கள் அமைதியான வழியில் போராட வேண்டும் என்று கூறினார்.

மேலும், நாட்டின் இயற்கை வளங்கள் அனைவருக்கும் பொதுவானது, காவிரி விவகாரத்தில் தமிழர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு மத்திய அரசு இந்த பிரச்சினையில் ஒரு தீர்வு காண வேண்டும் என்றும் தெரிவித்தார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic