Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 14, 2016

யார் இந்த வட்டாள் நாகராஜ்...?




வாட்டாள் நாகராஜ் கன்னட வெறியர் என்றும் பெரிய களப் போராளி என்றும் பல பதிவுகளைப் பார்க்கிறேன். ஆனால் அவரை ஒரு காமெடி பீசாகவே இன்று மக்கள் கர்நாடகத்தில் நினைக்கிறார்கள். அந்தக் காலத்திலே அவர் குறித்துத் தராசு இதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

ஆரம்பகாலத்தில் வாட்டாள் நிஜப் போராளியாக இருந்தது என்னவோ வாஸ்தவம் தான். ஆனால் இப்போது நிழல் போராளியாகிவிட்டார். தான் தூண்டி விடும் போராட்டம் கையை மீறிப் போகும் போது அந்தர் தியானம் ஆகி விடுவதில் ஆள் கில்லாடி.பட்டதாரிகள் தொகுதி மூலம் எம்.எல்.சி என்பதைத் தாண்டி பெரிய மக்கள் செல்வாக்கு எதுவும் அவருக்குக் கிடையாது.

பெங்களூரில் உள்ள கப்பன் பார்க் அனைவருக்கும் தெரிந்த ரொமாண்டிக் இடம். அது லார்டு கப்பன் என்ற பிரிட்டிஷ் பிரபுவின் பங்களிப்பு. அவரது சிலை ஒன்று உள்ளது. அதற்கு மாலையணிவிக்கப்பட்டபோது அதை வாட்டாள் எதிர்த்து பெரிய களேபரமாகிப் போனது. அதே போல் அவர் நடத்திய டாய்லெட் போராட்டம், கழுதைகளுக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் போராட்டம் என்று எல்லாமே தமாஷ் ரகம்.

ஆனாலும் வட்டாள் எப்படி பொலிடிக்கலாக சர்வைவ் ஆகிறார்? பணம் தான். கன்னடத் திரையுலகினர், வனப் பொருட்களைக் கடத்தும் கும்பல், இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பவர்கள் என்று சமூக விரோத சக்திகள் அவரை தங்கள் கேடயமாகப் பயன்படுத்துகின்றன. பொதுப் பிரச்னைகள் வரும்போது அதைப் பயன்படுத்தித் தங்கள் வியாபார எதிரிகளுக்கு நஷ்டம் ஏற்படுத்துவார்கள். ஒரே பணிமனையில் நாற்பது பஸ்களை எரித்த சம்பவத்தில் கூட இப்படி ஏதாவது உள்குத்து இருக்கும்.

பேஸ்புக்கில் பதிவு இட்டதற்காக ஒரு தமிழ் வாலிபரைத் தாக்கினோம் என்கிறார்கள். அப்படிப் பதிவிட்ட வாலிபர் யார் என்பதை எப்படி இவர்கள் கண்டுபிடித்தார்கள்? அதை வீடியோவாக எடுத்தது யார்? சமூக வலைதளங்களில் பரப்பியது யார்? கன்னடர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையேயான மோதல் என்று கலவரத்தைச் சித்தரிக்க நடக்கும் முயற்சியின் பின் காங்கிரஸ் அரசியல் ஒளிந்திருக்கிறது. இதில் நமக்கு ஏதேனும் நன்மை கிடைக்காதா என்று பாரதிய ஜனதாவும் காத்திருக்கிறது.

இடையில் மாட்டிக் கொண்டு அடிபடுவது அப்பாவித் தமிழர்களும் கன்னடர்களும் தான்.

நன்றி: ஷியாம் சண்முகம்
முகநூல் நண்பர்

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic