Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 14, 2016

தன்னார்வ அமைப்புகள் நிதி திரட்டுவது பெரும் பிரச்சனை...!


இந்தியாவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல்வேறு உலக நாடுகளிலிருந்து பல வழிகளிலும் கணக்கில் வராத‌ அளவில் நிதி சேகரிப்பது மிகப்பெரும் பிரச்சினையாக இருக்கிறது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

என்ஜிஓக்கள் தொடர்பாக வழக்கறிஞர் ஏ.எல்.சர்மா தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர்,"இந்தியாவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல வழிகளில் இருந்தும் கணக்கிலடங்கா அளவில் நிதி சேகரிப்பது மிகப்பெரிய பிரச்சினை.

இவற்றை கண்காணிக்க உரிய சட்டமில்லை. இந்தியா முழுவதும் 29 லட்ச என்ஜிஓ.க்கள் இயங்குகின்றன. இவை எப்படி இயங்குகின்றன, எங்கிருந்து நிதியுதவி பெறுகின்றன என்பதை கண்காணிக்க சட்டம் வகுக்க வேண்டும். இதற்காக மத்திய அரசிடம் சட்ட ஆணையம் உரிய பரிந்துரை செய்ய வேண்டும்" என்றார்.

நீதிபதி கான்வில்கர் கூறும்போது, "இவ்வழக்கில் சட்ட அமைச்சகத்துக்கு உதவும் வகையில் உறுதுணையாளராக மூத்த வழக்கறிஞர் ராகேஷ் துவேதி நியமிக்கப்படுகிறார்" என்றார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic