Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 16, 2016

பெங்களூருவில் பேருந்துகளுக்கு தீ வைத்தவர்கள் கைது!


 காவேரி நீர் பிரச்சினை தொடர்பாக பெங்களூருவில் வெடித்த வன்முறையில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 40 சொகுசு பேருந்துகளை தீவைத்து எரித்ததாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காவேரி நீர் பிரச்சினை தொடர்பாக கடந்த 12ஆம் தேதி பெங்களூருவில் கன்னட அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. அப்போது, தமிழக பதிவு எண் கொண்ட லாரிகள், பஸ்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. தமிழக உரிமையாளர்களின் கடைகள் சூறையாடப்பட்டன.

இந்த வன்முறையின்போது, நைஸ் ரோட்டில் உள்ள பணிமனையில் நிறுத்தப்பட்டு இருந்த கே.பி.என். டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சொகுசு பேருந்துகளுக்கு வன்முறையாளர்கள் தீவைத்தனர். இதில் 40 பேருந்துகள் எரிந்து நாசமாயின. இதனால் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, தனியார் டிராவல்ஸ் நிறுவனம் சார்பில் ராஜராஜேஸ்வரி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதனை தொடர்ந்து  ரக்ஷீத், சதீஷ், கிரண், கெம்பேகவுடா, பிரகாஷ், லோகேஷ் மற்றும் சந்தன் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் பெங்களூரு வீரபத்ரா நகர் அருகே உள்ள டிசோசா நகரில் வசித்து வருபவர்கள் என்பதும், அவர்கள் கெங்கேரி மற்றும் பீனியாவில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic