Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 16, 2016

கர்நாடகத்தை கண்டித்து தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம்!




காவேரி பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்தியும், கர்நாடக மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை போராட்டங்களுக்கு கண்டனம் தெரிவித்தும் தமிழகம்- புதுச்சேரியில் இன்று (வெள்ளிக்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. காலை 6 மணிக்கு துவங்கிய இந்த போராட்டம் மாலை 6 மணிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு அடைப்பு போராட்டத்துக்கு தி.மு.க, ம.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு அளித்துள்ளன. வியாபாரிகள் கடை அடைப்பு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர். லாரிகல் ஒடாது என்று லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் தமிழகத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.  அரசு பேருந்துகள் போலீசார் பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றன. மின்சார மெட்ரோ இரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றன. ஒரு சில இடங்களில் ஆட்டோக்கள் இயங்குவதை காண முடிந்தது. கோயம்பேடு சந்தையில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. அரசுப்பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டன. பெரும்பாலான தனியார் பள்ளிகளும் வழக்கம் போல் செயல்பட்டன.

முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தமிழகம் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  சென்னையில் மட்டும் 15,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic