காவேரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்ட்டதன் எதிரொலியாக கர்நாடகாவில் ஒளிபரப்பாகும் தமிழ் சேனல்களை தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என கன்னட அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காவேரியில் 50 டிஎம்சி தண்ணீரை திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவிடக் கோரி தமிழகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு 10 நாட்களுக்குள் சுமார் 13 டிஎம்சி என கணக்கீட்டு வினாடிக்கு கனஅடி நீர் திறக்க திங்கள் கிழமை உத்தரவிட்டது.
கூடுதல் தண்ணீர் தேவை என்றால் காவேரி கண்காணிப்பு குழுவை 3 நாட்களுக்குள் நாடவும் நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர். இதனையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவு படி தமிழகத்துக்கு 15,000 கன அடி தண்ணீரை திறந்து விட்டது. இதற்கு கன்னட அமைப்பினர் மற்றும் எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்களை செய்து வருகின்றனர்.
தமிழக பதிவு எண் கொண்ட லாரிகள் மீது அவர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். லாரி டயர்களில் இருந்து காற்றை பிடுங்கியும், வாகனங்களை அடித்து நொறுக்கியும் கன்னட அமைப்பினர் வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். மாண்டியாவில் சாலைகளில் டயர்களை எரித்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
கர்நாடகத்தில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் பாதுகாப்பு கருதி கர்நாடகத்திற்கு லாரிகளை இயக்க வேண்டாம் என்று லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனிடையே கர்நாடகாவில் உள்ள தமிழர்களை தாக்குவோம் என்று எச்சரிக்கை கொடுத்த கன்னட அமைப்பினர், தமிழ் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பயைும் நிறுத்தியுள்ளது.

No comments:
Write comments