பக்ரீத் பண்டிகையின் போது ஒட்டகத்தை பலி கொடுத்த நடிகர் வடிவேலுவின் உதவியாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் பக்ரீத் பண்டிகையின் போது ஒட்டகங்கள் பலியிடப்படுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. ஆனால் இந்த தடையை மீறி தமிழகத்தில் பல இடங்களிலும் பக்ரீத் தினத்தன்று ஒட்டகங்கள் வெட்டப்பட்டுள்ளது. இதே போல நடிகர் வடிவேலுவின் உதவியாளராக பணி புரிந்து வரும் ஆதம் பாவா என்பவரும் அதே தினத்தில் ஒட்டகத்தை பலியிட்டிருக்கிறார்.
மதுரையைச்சேர்ந்த ஆதம் பாவா பக்ரீத் அன்று ஒட்டகத்தை பலியிடுவதற்காக ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து ஒட்டகத்தை வரவழைத்து, நெல்பேட்டை சுங்கம் மசூதியில் கட்டி வைத்திருக்கிறார். இது குறித்து காவல்துறையினர் அவரை சந்தித்து ஒட்டகத்தை பலியிடக்கூடாது என கூறியுள்ளனர். அதற்கு சரி என்று சொன்ன ஆதம் பாவா, பக்ரீத் அன்று நாகமலை புதுக்கோட்டைக்கு ஒட்டகத்தை கொண்டு சென்று பலியிடிருக்கிறார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் ஆதம் பாவா மற்றும் அவருக்கு துணையாக இருந்த நபர்களையும் தேடி வருகின்றனர்.

No comments:
Write comments