அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளின் கண்டுபிடிப்புகள், மக்களின் பிரதான பிரச்னைகளைத் தீர்க்கும் விதமாகவே இருக்கும். இந்தாண்டில் மட்டும் மாணவர்கள் சாலையில் செல்லும் வண்டிகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் ஆட்டோமேட்டிக் கருவி, கிரைண்டர் மூலம் பாத்திரம் கழுவும் கருவி உள்ளிட்ட பல கருவிகளைக் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் நாற்று நடும் இயந்திரத்தை வடிவமைத்துள்ளார். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி சரண்யா, எரிசக்தி இல்லாமல் எளிய முறையில் நாற்று நடும் கருவியை வடிவமைத்துள்ளார்.
இந்த கருவி ஏழ்மையான விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. நன்றாக உழவு செய்யப்பட்டு நடுவதற்கு ஏற்ற வகையில் உள்ள வயலில் சரியான இடைவெளியில் இந்த கருவியை இழுத்து சென்றால் நாற்றுகளை யாருடைய உதவியும் இன்றி நடமுடியும். இதன் மூலம் சிறு, குறு விவசாயிகள் குறைந்த செலவில் நாற்றுகளை நட்டு விட முடியும்.
இன்று விவசாய வேலைகளை செய்வதற்கு ஆள் கிடைப்பதுதான் மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது. இந்தக் கருவியை மேம்படுத்தவும் நடைமுறைக்குக் கொண்டு வரவும் அரசு ஊக்குவிப்பதும் உதவி செய்வதும் அவசியம்.
No comments:
Write comments