உத்திரபிரதேசத்தில் பிறந்து 18 நாட்களே ஆன ஒரு ஆண்குழந்தையை கொல்ல முயன்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஒரு தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்து 18 நாட்களே ஆன அந்த குழந்தையை மருத்துவமனையின் மாடியிலிருந்து வீசி கொல்ல முயன்றிருக்கிறார். நல்லவேலையாக அந்த குழந்தை காயங்களுடன் உயிர்பிழைத்தது. இச்சம்பவம் அனைத்தும் அங்குள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.
முதலில் குழந்தையை ஒரு போர்வையில் சுற்றியவாரு அந்த பெண் குழந்தையை பால்கனிக்கு கொண்டுவந்த ஓரமாக சென்று அந்த குழந்தையை கீழே வீசிவிட்டு யாருக்கு சந்தேகம் வந்துவிடாதவாரு இரு பெட்ஷீட்களை கொண்டு குழந்தையை தன் கையில் ஏந்தியிருப்பது போல பாவனை செய்து மருத்துவமனையின் அறைக்குள் செல்கிறார். குழந்தையை காணவில்லை என்றதும் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் குழந்தை கீழே விழுந்த இடத்திலிருந்து அழுகை சத்தம் வர அக்குழந்தை காயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டது.
விசாரிக்கும் போது இச்சம்பவத்தில் ஈடுபட்டது அந்த குழந்தையின் உறவினர் பெண்தான் என்பது தெரியவந்தது. தனக்கு பிறந்த 3 குழந்தைகளும் பெண் பிள்ளைகளாக போக, தனது சொந்தக்காரர் ஆண் பிள்ளை பெற்ற பொறாமையில் அக்குழந்தையை கொலை செய்ய முயற்ச்சித்திருக்கிறாள் அந்த பெண். இறுதியில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மருத்துவமனை மாடியிலிருந்து வீசியும் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்ததால் பலருக்கும் ஆச்சிரியம் ஏற்பட்டது. மரணம் என்பது கூட இறைவன் விதியினால் தான் ஏற்படும் என்பதற்கு இதுவும் ஓர் நல்ல உதாரணம்.

No comments:
Write comments