பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தல் பிரசாரத்தில் நிதிஷ்குமார் கூறியிருந்தது போல், கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் அம்மாநிலத்தில் மதுவிலக்கை அமல்படுத்தியுள்ளார். மேலும், அண்டை மாநிலங்களில் இருந்து மதுகடத்தலை தடுக்க பீகார் அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
விதிமுறைகளை மீறி மதுவை பதுக்கி வைத்திருப்போருக்கு சிறைதண்டனை வழங்கும் வகையில் சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கு அமலுக்கு வந்த பிறகு கள்ளச்சாராயம் குடித்து சிலர் உயிரிழந்தனர். எனினும், நிதிஷ்குமார் அரசு தளரவில்லை. கள்ளச்சாராயத்தை ஒழிக்க காவல்துறையில் சிறப்பு குழுவினர் அமைக்கப்பட்டு தீவிரமாக வேட்டையாடி வருகின்றனர்.
இந்நிலையில், பாட்னாவில் முதல்வர் நிதிஷ்குமார் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மதுவிலக்கை கொண்டு வந்ததில் எனக்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு திருப்தியும், மனநிறைவும் ஏற்பட்டிருக்கிறது. மது குடிப்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமைதான். ஆனால், உடல் நலத்தை கெடுக்கும் மதுபானங்களை ஏன் குடிக்கிறீர்கள்? இரண்டு ‘பெக்’ போட்டு தேவையில்லாமல் ஏன் உங்கள் உடலை நீங்களே கெடுத்து கொள்கிறீர்கள்? ேபாதை வேண்டுமா?
அறைக்குள் சென்று லைட்டை ஆப் செய்து விட்டு ஜூஸ் குடித்து பாருங்கள். மதுகுடித்ததை போன்ற உணர்வு ஏற்படும்’’ என்றார். இதை கேட்டு நிருபர்கள் சிரித்தனர். தொடர்ந்து நிதிஷ்குமார் கூறுகையில், ‘‘நாடு முழுவதும் மதுவிலக்கு கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஏற்கனவே வலியுறுத்தியிருக்கிறேன்’’ என்றார்.

No comments:
Write comments