ஈரான் நாட்டு தலைவர்கள் சவுதி மற்றும் இன்ன பிற அரபு நாடுகளை குற்றஞ்சாட்டி கருத்து வெளியிட்டதை சவுதி அரேபியா அரசு வன்மையாக கண்டித்துள்ளது.
சன்னி இஸ்லாமியர்களை கொண்ட சவுதி அரேபியா அரசுக்கும் ஷியா பிரிவு இஸ்லாமியர்களை கொண்ட ஈரான் நாட்டிற்கும் நெடுங்காலமாகவே வார்த்தைப்போர் நிகழ்ந்து வருகிறது. ஒருவரையொருவர் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். கடந்த வருடம் ஹஜ் யாத்திரையின் போது நெரிசல் ஏற்பட்டு இரண்டாயிரத்திற்குமேற்பட்டோ உயிரிழந்தனர். இதில் ஈரான் நாட்டைச்சேர்ந்தவர்களே அதிகம்.
இச்சம்பவத்தை தொடர்ந்து இரு நாட்டு அரசும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டியது. ஹஜ் யாத்திரைகளாக வந்த ஈரானியர்கள் விதிமுறைகளை மீறி சென்றதால் தான் நெரிசல் ஏற்பட்டது என சவுதி அரசு குற்றஞ்சாட்டியதோடு இவ்வருடம் ஹஜ் யாத்திரை வர ஈரான் நாட்டவர்களுக்கு சவுதி அரேபியா அரசு தடை விதித்தது. மேலும் சவுதி அரசின் முத்த மத குருவான அப்துல அஜீஸ் ஈரானியர்கள் முஸ்லிம்கள் அல்ல என பத்வா வழங்கினார். இதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்ததோடு நெரிசல் ஏற்பட்டு முஸ்லிம்கள் இறந்ததற்கு சவுதி அரேபியா அரசே காரணம் என்றும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறது.
இது தொடர்பாக மெக்கா மாகாணத்தின் கவர்னர் காலித் பின் பைசல் கூறியுள்ளதாவது, "எங்கள் நாட்டின் மீது யார் பகைமையை ஏற்படுத்த முயன்றாலும் அதற்கு ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். அவர்கள் (ஈரான்) தங்களுடைய தவறை திருத்திக்கொண்டு நேர்வழி பெற வேண்டுமென இறைவனை பிரார்திக்கிறேன். அதே சமயத்தில் சவுதி மீது படையெடுக்க அவர்கள் நினைத்தால் அதை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டோம். இறைவனின் உதவியோடு தகுந்த பதிலடி கொடுப்போம். இங்குள்ள புனித பூமியை காப்பதும், எங்கள் நேசத்திற்குரிய நாட்டை பாதுகாப்பதும் எங்கள் மீது கடமை என நாங்கள் கருதுகிறோம். எங்கள் நாட்டின் எந்தவொரு பகுதிக்கும் தீங்கிழைக்கப்படுவதை பொறுத்துக்கொள்ளமாட்டோம். எங்களில் ஒருவர் உயிரோடு இருக்கும் வரை நாங்கள் போராடுவோம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆனால் எந்த ஈரான் தலைவர்களிடமிருந்தும் போர் தொடுப்பதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை. ஈரானில் இருக்கும் சவுதி தூதரகம் தாக்குதலுக்கு உள்ளானபிறகு சவுதி அரசு தன்னுடைய தூதரை திரும்ப பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments