Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 24, 2016

பாகிஸ்தானை குற்றஞ்சாட்டுவதே இந்தியாவின் வாடிக்கை!- நவாஸ் ஷெரீஃப்


உரி தாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், அனைத்திற்கும் பாகிஸ்தானை குற்றம்சாட்டுவது தான் இந்தியாவின் பழக்கம் என தெரிவித்துள்ளார்.

கஷ்மீரின் உரி பகுதியில் இராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் கடந்த வாரம் நடத்திய தாக்குதலில் 18 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டன தெரிவித்தன. பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும் என கருத்து தெரிவித்தனர். ஐநா பொது சபையில் க‌ஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவிற்கு எதிராக பாக். பிரதமர் நவாஸ் ஷெரீப் பேசினார். இதற்கு இந்தியா தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், உரி தாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நவாஸ் ஷெரீப், அனைத்து விவகாரங்களுக்கும் பாகிஸ்தானை குற்றம்சாட்டுவது இந்தியாவின் பழக்கம். இது இந்தியாவின் நீண்ட கால பழக்கம். இது போன்ற தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்த பல நாட்கள், வாரங்கள் எடுத்துக் கொள்வார்கள். இது போன்ற சம்பவங்கள் எதற்கும் இந்தியா எந்த ஆதாரத்தையும் அளித்ததில்லை. உரி தாக்குதலுக்கும் பாக். காரணம் என்பதற்கும் இந்தியாவிடம் எந்த ஆதாரமும் இல்லை.

இந்தியா தனது அட்டூழியங்களை நிறுத்த வேண்டும். க‌ஷ்மீரில் இந்தியா தீவிரமான மனிதஉரிமை மீறலில் ஈடுபட்டு வருகிறது. கடந்த இரண்டரை மாதங்களில் க‌ஷ்மீரில் 108 பேர் உயிர் தியாகம் செய்துள்ளனர். ஆனால் இந்தியா, பாகிஸ்தான் மீது பலமான குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறது. க‌ஷ்மீரில் மனித உரிமை சூழலை நிலை நாட்டும்படி அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, சவுதி அரேபியா, ஜப்பான், துருக்கி மற்றும் இன்னும் பல நாடுகளின் தலைவர்களை கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் அனைவரும் பாகிஸ்தானின் நிலையை புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic