Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 24, 2016

கேரளா கோழிக்கோட்டில் பா.ஜ.கவின் தேசிய செயற்குழு கூட்டம்!


பா.ஜனதா தேசிய கவுன்சிலின் 3 நாள் கூட்டம் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று கோழிக்கோடு வருகிறார்.

பா.ஜனதா தேசிய கவுன்சிலின் 3 நாள் கூட்டம் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நேற்று தொடங்கியது. இதையொட்டி அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா நேற்றுமுன்தினம் கோழிக்கோடு வந்து சேர்ந்தார். நேற்று மாலை அமித்ஷா தலைமையில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் மாநில தலைவர்கள், பொறுப்பாளர்கள், செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டம் இன்றும் (சனிக்கிழமை) தொடர்ந்து நடக்கிறது.

தேசிய கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று கோழிக்கோடுக்கு சிறப்பு விமானத்தில் வருகிறார். அவர் இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அதைத் தொடர்ந்து நடக்கும் கட்சி பிரதிநிதிகள் கூட்டத்திலும் மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார். பின்னர் இன்று இரவு அவர் கோழிக்கோடு விருந்தினர் மாளிகையில் தங்க உள்ளார்.

தேசிய கவுன்சில் கூட்டத்தையொட்டி கோழிக்கோட்டில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. கூட்டத்தில் மத்திய மந்திரிகள், பா.ஜ.க.வை சேர்ந்த முதல்–மந்திரிகள், தேசிய மற்றும் மாநில அளவிலான தலைவர்கள் என சுமார் 2,500 பிரதிநிதிகள் பங்கேற்க இருக்கின்றனர்.

கூட்டத்தின் நிறைவு நாளில் அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இதில் காஷ்மீரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்தல், வறுமை ஒழிப்பு உள்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெறும் என தெரிகிறது.

ஜன சங்க தலைவராக பொறுப்பேற்றவுடன் தீனதயாள் உபாத்யாயா கோழிக்கோட்டில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றார். அவருடைய நூற்றாண்டு விழாவும் இந்த ஆண்டு வருவதால், தேசிய கவுன்சில் கூட்டத்தை அவருக்கு அர்ப்பணிக்க பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. தீனதயாள் உபாத்யாயா தலைமையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற மூத்த நிர்வாகிகளை மோடி கவுரவிக்க உள்ளார். பிரதமர் வருகையையொட்டி கோழிக்கோட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic