Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 6, 2016

உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக விவசாயிகள் போராட்டம்..!


காவேரியிலிருந்து தமிழகத்திற்கு தண்னீர் திறந்துவிட வேண்டுமென்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகத்தில் விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

சம்பா சாகுபடிக்கு 50 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட வேண்டும் எனக்கூறி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. ஆனால், போதிய மழை இல்லாத காரணத்தினால், தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என கர்நாடக அரசு கூறியது. இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அடுத்த 10 நாட்களுக்கு 15 ஆயிரம் கன அடிவீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயிரகணக்கான விவசாயிகள் கர்நாடகாவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் காரணமாக 700க்கும் மேற்பட்ட பேருந்துகள் சாலைகளில் நிற்கின்றன. பெங்களூரு, மைசூருவிலிருந்து தமிழகம் மற்றும் கேரளா செல்லும் பேருந்துகளை மறித்து போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மாண்டியா மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. மாவட்டம் முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அடைக்கப்பட்டுள்ளன. பேருந்துகள் இயக்கப்படவில்லை. பெங்களூருவிலிருந்து 10 கி.மீ., தூரத்தில் உள்ள மாண்டியா மாவட்டம் எப்போதும், காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிரான போராட்டத்திற்கு மையப்பகுதியாக விளங்கும். விவசாயத்துறை, சினிமாத்துறை சார்பில் வரும் 9 ம் தேதி கர்நாடகா முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

போராட்டம் தீவிரமாக நடைபெறுவதை தொடர்ந்து, கர்நாடக முதல்வர் சித்தராமையாவும், சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திராவும் மக்கள் அமைதி காக்க வேண்டும் எனவும், சட்டத்தை மக்கள் கைகளில் எடுக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர். உச்ச நீதிமன்ற  தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என அம்மாநில பா.ஜ.க‌, கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், பெங்களூருவிலிருந்து தஞ்சாவூர் வந்த கர்நாடக பேருந்து, மேலவந்சாசாவடி பகுதியில், நிறுத்தப்பட்டிருந்தபோது மர்மநபர்கள் கல்வீசி கண்ணாடிகளை உடைத்தனர். இதனையடுத்து பேருந்து கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic