Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 5, 2016

இளைஞர்கள் காணாமற்போன விவகாரம் - கேரளாவில் முகாமிட்டிருக்கும் என்.ஐ.ஏ


காணாமல் போனவர்களைப்பற்றிய விசாரணை நடத்துவதற்காக தேசிய புலனாய்வுத்துறையின் அதிகாரிகள் கேரளாவில் முகாமிட்டுள்ளனர்.

கேரள மாநிலம் காசர்கோடு, பாலக்காடு ஆகிய மாவட்டங்களைச்சேர்ந்த சில நபர்களை கடந்த மே-ஜூன் மாதங்களிலிருந்து காணவில்லை. அவர்கள் அனைவரும் சிரியாவில் இயங்கி வரும் பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறார்கள்.

இதனை தீவிரவாக விசாரிக்க கேரள மாநிலத்தில் முகாமிட்டுள்ள தேசிய புலனாய்வு அதிகாரிகள் காணாமற்போனவர்கள் தொடர்பான வழக்கில் இதுவரை காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின் அறிக்கையை ஆராய்ந்து வருவதோடு, தொலைந்து போனவர்கள் அனைவருக்கும் வேறு ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்பதனையும் ஆராய்ந்து வருகின்றனர்.அதே வேலையில் சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக் நடத்தி வரும் அறக்கட்டளையில் பணி புரிந்து வந்த அர்ஷி குரைஷி தீவிரவாத இயக்கத்தோடு தொடர்புடையவர் என சமீபத்தில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட குரைஷிக்கும் காணாமற்போனவர்களுக்கும் ஏதாவது தொடர்பு இருந்ததா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொலைந்து போனவர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானிற்கு, தெஹ்ரான் அல்லது இலங்கை வழியாக சென்று ஐ.எஸ் தலைவர் பக்தாதியை சந்தித்து அவ்வமைப்பில் இணைந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றனர். இருந்த போதிலும் அவர்கள் காணாமல் போனதிலிருந்து தங்களுடைய குடும்பத்தார்களை ஏதேனும் தொடர்பு கொண்டார்களா? என்பதனையும் விசாரித்து வருகின்றனர்.

மேலும் அவர்களுடைய வங்கி கணக்குகள், மொபைல் போன் மூலம் யார் யாரிடம் பேசியிருக்கிறார்கள், அவருடைய கம்யூட்டர்கள், லேப்டாப்கள் என அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பீஹாரை சேர்ந்த யாஸ்மின் அகமது என்ற பெண்ணும் இதற்கு முக்கிய உடந்தையாக இருந்ததாக‌ சந்தேகிக்கப்படுகிறது. எனினும் அந்தப் பெண்ணும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு விசாரித்து வருகின்றனர். இது வரை 50 ற்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவிலிருந்து ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவ்வமைப்பில் சேர முயன்ற 54 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic