முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் நலமுடன் இருப்பதாகவும், திட உணவுகளை உட்கொள்வதாகவும் அப்பல்லோ அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுக தொண்டர்கள் சாலையில் குவிந்துள்ளனர். ஜெயலலிதா குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பலரும் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர்கள், முக்கிய பிரபலங்களுக்கு கூட ஜெயலலிதாவை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் சாலையிலேயே அனைவரும் காத்துக் கிடக்கின்றனர்.
No comments:
Write comments