தைரியம் இருந்தால் உங்களது தற்கொலைப்படையினரை பாகிஸ்தானிற்கு அனுப்பி வைத்து அந்நாட்டு இராணுவ வீரர்களை கொல்லட்டும் என சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அபு ஆஜ்மி ராஜ்தாக்ரேவிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
கஷ்மீர் மாநிலம் உரியில் இந்திய இராணுவ தலைமையகத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இந்திய இராணுவ வீரர்கள் 18 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு பாகிஸ்தான் நாட்டிற்கு எதிராக கடுமையான கண்டன குரல்கள் எழுந்துவருகிறது. சர்வதேச அளவிலும் பல நாட்டு தலைவர்கள் இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் செயல்பட்டு வரும் மகாராஷ்டிரா நவனிர்மான் சேனா அமைப்பின் ராஜ்தாக்ரே நேற்றைய தினம் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் மும்பையில் இருக்கும் பாகிஸ்தான் நாட்டு கலைஞர்கள் 48 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் இல்லையேல் எம்.என்.எஸ் அமைப்பினரால் அவர்கள் வலுக்கட்டாயமக வெளியேற்றப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து சமாஜ்வாதி கட்சியின் மகாராஷ்டிரா மாநில தலைவர் அபு ஆஜ்மி பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது, "பாகிஸ்தான் இந்தியாவிற்குள் தற்கொலை படையினரை அனுப்பி தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறது. அப்படியானால் அதற்கு பதிலடி கொடுக்க ராஜ்தாக்ரேவும் அவரது படைகளை பாகிஸ்தானிற்கு அனுப்பட்டும். அதைவிட்டு விட்டு இந்தியாவிற்குள் முறையாக விசா பெற்று வந்தவர்களை மிரட்ட வேண்டாம். மக்களை முட்டாளாக்கும் செயல்பாடுகளை முதலில் நிறுத்திக்கொள்ளுங்கள். இப்படி செய்வதனால் மேலும் உங்களுடைய வாக்கு வங்கி குறையத்தான் செய்யும். பாகிஸ்தானை விடுங்கள், மகாராஷ்டிராவில் ஒரு சிறிய குழு தான் நீங்கள். இன்றைக்கு நக்ஸல்கள் பல இடங்களில் காவல்துறையினரையும், இராணுவத்தினரையும் கொன்று வருகிறார்கள். உங்களால் கராச்சிக்கோ அல்லது லாகூருக்கோ உங்கள் ஆட்களை அனுப்ப முடியவில்லை எனில் குறைந்த பட்சம் கட்சிரோலி, சந்திராபூர் ஆகிய இடங்களுக்காவது அனுப்பி நக்ஸல்களுடன் சண்டை போட வையுங்கள். அப்படி செய்தால் நீங்கள் ஏதாவது உருப்படியான காரியத்தை செய்கிறீர்கள் என்பதை ஏற்றுக்கொள்வேன். " என தெரிவித்துள்ளார்.
ராஜ்தாக்ரேவிற்கு சக்தி இருந்தால் பாகிஸ்தானிற்கு எதிராக டெல்லிக்குச்சென்று பாகிஸ்தான் தூதரகத்தை முற்றுகையிட்டு அதனை மூட வைக்கட்டும். மேலும் இந்திய தூதரகத்திற்குச் சென்று பாகிஸ்தான் நாட்டவருக்கு விசா வழங்குவதை தடுத்து நிறுத்தட்டும். இவற்றையெல்லாம் செய்யாமல் முறையாக அனுமதி பெற்று, விசாவுடன் இந்தியா வந்த கலைஞர்களை மிரட்டுவது என்பது முட்டாள்தனம். அப்படியே செய்வதானால் ஏன் மும்பையில் மட்டும் செய்கிறீர்கள், நாடு முழுக்க செய்து பாருங்கள் என கண்டித்தார்.

No comments:
Write comments