Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 15, 2016

முழு அடைப்பு போராட்டத்திற்கு அதிமுக கூட்டணி கட்சியான ம.ஜ.க ஆதரவு..!

 
காவேரி பிரச்சினைக்காக தமிழகத்தில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. ஆளும் அதிமுக தவிர‌  முக்கிய எதிர்க்கட்சிகள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அதிமுகவின் கூட்டணி கட்சியான மனிதநேய ஜனநாயக கட்சி, இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது, அரசியல் களத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அக் கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தமீமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கை கூறியிருப்பதாவது, தமிழக முதல்வர் டாக்டர் அம்மா அவர்கள் நடத்திய சட்டப்போராட்டத்தின் விளைவாக உச்சநீதிமன்றம் கர்நாடக அரசை காவிரியில் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டது.

இதை பொறுத்துக்கொள்ள முடியாத கன்னட வெறியர்கள் தமிழ்நாட்டுக்கு எதிராகவும், தமிழர்களுக்கு எதிராகவும் வன்முறையில் இறங்கி வெறியாட்டம் நடத்தியுள்ளனர். இந்த அநீதிக்கு எதிராகவும், காவேரி ஆற்றின் உரிமைக்காகவும் தமிழக மக்கள் ஓரணியில் திரண்டு இருக்கிறார்கள் .

இந்நிலையில் காவேரி விவகாரத்தில் தவறான அணுகுமுறைகளை பின்பற்றும் மத்திய அரசையும், கர்நாடக அரசையும் கண்டித்து தொழிற் சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் நாளை தமிழகத்தில் நடத்தும் பந்துக்கு ஆதரவு கேட்டு காவேரி போராட்டக் குழுவின் சார்பில் P.R.பாண்டியன் அவர்கள் விடுத்த வேண்டுகோளை மனித நேய ஜனநாயக கட்சியின் நிர்வாகக் குழு பரிசீலித்தது.

தமிழக மக்களின் நலன் காக்க, அரசியல் பேதங்களை கடந்து நடைபெறும் இப்போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பது என மனிதநேய ஜனநாயக கட்சி முடிவு செய்திருக்கிறது. அமைதி வழியில் நடைபெறும் இப்போராட்டம் வெற்றிபெறவும் மனிதநேய ஜனநாயக கட்சி வாழ்த்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic