இஸ்லாமியர்களில் கணவன்மார்கள் தனது மனைவிகளுக்கு விவகாரத்து கொடுக்கும் முறையை தலாக் என்று கூறுகிறார்கள். ஒரு கணவன் தன்னுடைய மனைவியிடம் மூன்று முறை தலாக் என்று கூறிவிட்டால் விவகாரத்து கொடுத்ததாக ஆகிவிடும் என்ற விதிமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்பு குரல் வலுத்துவருகிறது. இது முற்றிலும் பெண்களின் உரிமையை பரிக்கும் செயல் எனவும் இதற்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவிற்கு எதிர்ப்பு தெரிவித்த பதில் மனு தாக்கல் செய்த முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் தெரிவித்திருந்ததாவது, இஸ்லாமியர்களின் திருமணம், விவகாரத்து போன்றவைகள் அனைத்தும் தனியார் சட்டங்களாகும். இந்த சட்டங்கள் அனைத்தும் வேத நூலான குரான் அடிப்படையில் வகுத்ததாகும். இதில் தலையிடுவதற்கோ, இதனை மாற்றி அமைப்பதற்கோ எந்த நீதிமன்றத்திற்கும் அதிகாரம் கிடையாது. முஸ்லிம் தனியார் சட்டங்களில் தலையிடுவது என்பது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது என்றும் தெரிவித்திருந்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் நிலைபாட்டை நான்கு வாரங்களுக்குள் அளிக்க வேண்டுமென உத்தரவிட்டது.
இது தொடர்பாக பா.ஜ.கவின் முக்கிய அமைச்சர்களான அருண் ஜெட்லி, ராஜ்னாத் சிங், மனோகர் பாரிக்கர், மேனகா காந்தி ஆகியோர் சட்ட ஆலோசர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர். உலகம் முன்னேற்றபாதையில் பெண்களின் பங்கு அதிகமாக காணப்பட்டு வருகிறது. அந்த வளர்ச்சியை நோக்கி நாமும் பயணிக்க வேண்டியது இருக்கிறது. மூன்று தலாக் விவகாரத்தில் ஏனைய இஸ்லாமிய நாடுகளான சவுதி அரேபியா, பாகிஸ்தான், ஈராக் போன்றவைகளில் சில நாடுகள் இதனை தடை செய்திருப்பதும், சில நாடுகள் இதற்கு கடுமையான விதிமுறைகளை வகுத்திருப்பதும் கவனிக்கப்பட வேண்டிய விசயமாகும். எனவே இத்தகைய முறையை இந்தியாவில் தடை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசு பரிந்துரை செய்யும் என அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ள்து.
No comments:
Write comments