கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் கோயில்களில் பின்பற்றப்படும் சடங்கு ஒன்றிற்கு தடை விதிக்க கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் கோயில்களில் பிராமணர்கள் உண்டுவிட்டு சென்ற எச்சில் வாழை இலை மீது தலித் மக்கள் அங்கபிரதக்ஷ்னம்(உருண்டு செல்லும்) வழிமுறை இருந்து வருகிறது. இப்படி செய்வதால் நோய்கள் குணமாகுவதோடு பல பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்று நம்பப்பட்டு வருகிறது. இது முற்றிலும் தடை செய்யப்பட வேண்டுமென மத்திய அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சமூக நீதித்துறை சார்பில் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது "இத்தகைய சடங்குகள் மனித தன்மை அற்றது என்றும், இது முற்றிலும் மூட நம்பிக்கை என தெரிவித்துள்ளது. அதே சமயம் அதற்கு ஆதரவாக பேசுபவர்கள் இந்த சடங்குகள் அனைத்தும் அவரவர் விருப்பம் என்றும் இதனால் எந்த ஜாதியினருக்குமிடையே வேற்றுமை படுத்தப்படவில்லை என கூறுகின்றனர்.
இருந்த போதிலும் இத்தகைய சடங்குகளுக்கு தடை விதிக்க வேண்டுமென மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. இத்தகை சடங்குகளில் ஈடுபடுபவர்களுடைய கண்ணியம் கேள்விக்குறியாக்கப்படுவதோடு அவர்களுக்கு உடல் ரீதியான பிரச்சனைகளும் ஏற்படுவதாக தெரிவித்துள்ளது. இது அவரவர் விருப்பம் சார்ந்தது என்றாலும் ஒருவருடைய கண்ணியம் மற்றும் உடல் நலத்திற்கு தீங்கானது என்று வரும்போது அதனை தடை செய்வதே நல்லது என்றும் அதனை மத உரிமைகளில் தலையிடுவது என்பதாக கருதக்கூடாது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் இத்தகைய சடங்குகள் பல்வேறு தென் மாவட்டங்களில் குக்கே சுப்பிரமணிய என்ற விழாவின் போது மூன்று நாளைக்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இத்தகை சடங்குகள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் இத்தகைய சடங்குகள் ஏப்ரல் மாதத்தில் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக கரூர் மாவட்டத்தில் சதாசிவ பர்மேந்திரா கோயிலில் ஆராதனை திருவிழாவின் போது இந்தச் சடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பா.ஜ.க அரசு உத்திரபிரதேசத்தில் வரும் ஆண்டில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தலித் சமூகத்தினரை கவர்வதற்காகவே இத்தகைய கோரிக்கையை வைத்திருப்பதாகவும் விமர்சிக்கப்படுகிறது.

No comments:
Write comments