சிரியாவில் நடைபெற்று வரும் சண்டையில் இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மத்திய கிழக்கு நாடான சிரியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து உள் நாட்டுப்போர் நடந்து வருகிறது. பயங்கரவாதிகளுக்கும் நேட்டோ படை வீரர்களுக்கும் இடையே நடைபெற்று வரும் இந்த போரில் இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொல்லப்பட்டவர்களில் 86 ஆயிரம் பேர் அப்பாவி பொதுமக்கள் என்றும், 15 ஆயிரத்திற்குமேற்பட்ட குழந்தைகளும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களும் இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கலவரக்காரர்களில் இதுவரை 52 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சிரியா நாட்டு இராணுவ வீரர்கள் மொத்தம் 59 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இதர நாடுகளான ஈராக், ஈரான், லெபனானை சேர்ந்தவர்களில் மொத்தம் 48 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஐ.எஸ் பயங்கரவாதிகள் மற்றும் அல்கொய்தா பயங்கரவாதிகள் மொத்தம் 52ஆயிரம் பேர் கொல்லபப்ட்டுள்ளனர். மேலும் மூவாயிரத்திற்குமேற்பட்டவர்களின் அடையாளங்கள் தெரியவில்லை என அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கின்றது.

No comments:
Write comments