Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 2, 2016

பதவி இழந்த ஆம் ஆத்மி அமைச்சருக்கு ஆதரவு..! - ஆஷுதோஷ்


ஆபாச வீடியோ விவகாரத்தில் பதவி இழந்த டெல்லி மந்திரி சந்தீப் குமாருக்கு ஆதரவு கொடுக்கும் முயற்சியாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அசுதோஷ், மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு மற்றும் வாஜ்பாயை உதாரணமாக சுட்டி காட்டிஉள்ளார்.

”பாலியல் என்பது நம்முடைய அடிப்படை உள்ளுணர்வில் அங்கமான ஒன்று,” என்று அசுதோஷ் கூறிஉள்ளார்.
நியாயப்படுத்தும் விதமாக ஆம் ஆத்மி தலைவர் அசுதோஷ் தனது பிளாக்கில் பதிவு செய்து உள்ள தகவலில், இந்திய வரலாற்றில் முழு உதாரணங்கள் உள்ளது நம்முடைய தலைவர்கள் மற்றும் ஹீரோக்கள் பொது வாழ்க்கைக்கு பின்னால் அவர்கள் ஆசையுடன் வாழ்ந்து உள்ளனர். பண்டிட் ஜவகர்லால் நேரு பல்வேறு பெண் தோழிகளுடன் தொடர்பில் இருந்தார் என்று கிசுகிசு தகவல்கள் வெளியானது, ஆனால் அது அவருடைய அரசியல் வாழ்க்கையை பாதிக்கவில்லை. எட்வினா மவுன்ட்பேட்டன் உடனான ஜவர்கலால் நேருவின் உறவு பரவலாக பேசப்பட்டது. ஒட்டு மொத்த உலகமே இதனை அறியும். அவர்களுடைய பாசம் நேருவின் கடைசி மூச்சுவரையில் தொடர்ந்தது.

இது பாவமா? வரலாறு பல்வேறு உண்மை சம்பங்களை பார்த்து உள்ளது, 1910-ம் ஆண்டில் காங்கிரஸ் காந்திஜியின் சாரா சவுத்ரி உடனான உறவினால் கவலைக் கொண்டிருந்தது, அவர் ரவீந்திரநாத் தாகூரின் தூரத்து உறவினர். காந்திஜியும் சாரா தன்னுடைய ஆன்மிக மனைவி என்று ஒப்புக் கொண்டார். கஸ்துரிபா காந்தி மிகவும் தொந்தரவுக்கு உள்ளானார். பின்நாட்களில் பிரம்மச்சரியத்தை சோதனை செய்துக் கொள்ள இரண்டு பெண்களுடன் ஆடையின்றி இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் நாட்டில் எதிர்ப்பு எழும் என்று காந்தியை நேரு கேட்டுக் கொண்டார், ஆனால் காந்தி ஜி அதனைக் கேட்கவில்லை என்று கூறிஉள்ளார்.

காந்திஜி மற்றும் நேரு தவிர்த்து அசுதோஷ் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், சோசலிச தலைவர் ராம் மனோகர் லோஹியா,  ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோரின் தனிப்பட்டை வாழ்க்கையை உதாரணம் காட்டிஉள்ளார்.
டெல்லி மாநில ஆம் ஆத்மி அரசில் சமூக நலத்துறை மந்திரியாக இருந்தவர் சந்தீப் குமார். இவர் 6 பெண்களுடன் ஆபாசமாக இருந்ததாக தகவல் வெளியானது. மேலும் அவர் பெண்களுடன் ஆபாசமாக இருப்பது போன்ற வீடியோ சி.டி.க்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சர்ச்சைக்குரிய சி.டி. ஒன்றை கட்சித்தலைவரும், முதல்–மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவாலிடம் கட்சியினர் சமர்ப்பித்தனர். இதைத்தொடர்ந்து கட்சியின் கொள்கைக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட மந்திரி சந்தீப் குமாரை முதல்–மந்திரி கெஜ்ரிவால் பதவி நீக்கம் செய்தார்.

ஆனால் ஆபாச வீடியோ விவகாரத்தில் பதவி இழந்த டெல்லி மந்திரி சந்தீப் குமார் சர்ச்சைக்குரிய சி.டி.யில் இருப்பது நான் இல்லை ‘தலித் பிரிவை சேர்ந்தவர் என்பதால் எனக்கு எதிராக சதி நடந்துள்ளது’ விளக்கம் அளித்தார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic