Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 2, 2016

எனக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்! - பிரதமர் மோடி


குறிப்பிட்ட பிரச்னையை கிளப்பி எனக்கு அவப்பெயர் ஏற்படுத்த சதி நடப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தனியார் டிவிக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டி ஒன்றில், நாட்டின் பொருளாதாரம் குறித்து பதவி ஏற்றபிறகு வெள்ளை அறிக்கை வெளியிடாததால், அரசியல் ரீதியாக அவப்பெயர் ஏற்பட்டது. நான் பதவியேற்ற போது, தனியார் முதலீடுகள் வெளியேறி வந்தன. தற்போது இது நிறுத்தப்பட்டுள்ளது. 2014ல் எதிர்பார்த்ததை விட பொருளாதாரம் மிகவும் மோசமாக இருந்தது.

அரசியல் ஆதாயத்துக்காக பொருளாதாரம் குறித்த அறிக்கையை வெளியிடுவதா அல்லது நாட்டின் நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பதா என்ற சூழ்நிலையை நான் எதிர்கொண்டேன்.

முதல் பட்ஜெட்டுக்கு முன்னர் பொருளாதார நிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடுவது குறித்த குழப்பம் ஏற்பட்டது. அப்படி வெளியிட்டால், பொருளாதாரம் இன்னும் மோசமாகும். சந்தைகள் கடுமையாக பாதிக்கும். நம்பிக்கைத்தன்மை குறைவதுடன் இந்தியா மீதான உலக நாடுகளின் பார்வை மோசமாகும்.

பொருளாதார சூழ்நிலையை மீட்டெடுப்பதில் கடுமையான சிக்கல் ஏற்படும். இதனால் தான் வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை. தேசத்தின் நலனை கருத்தில் கொண்டு இதில் அமைதி காத்தோம். இது எங்களை பாதித்தது. பலர் எங்களை விமர்சனம் செய்தனர்.

இது எனது தவறாக பார்க்கப்பட்டது. தற்போது இந்தியா வேகமான வளரும் பொருளாதாரம் கொண்டது. வங்கி அதிகாரிகளுடன் நான் பேச்சவார்த்தை நடத்தினேன். அப்போது தொழிலதிபர்களுக்கு கடன் வழங்குவதில் தாமதம் ஏற்படக்கூடாது எனக்கூறினேன்.

கடந்த லோக்சபா தேர்தலின் போது, மத ரீதியிலான ஓட்டு வங்கிக்கு முடிவு கட்டப்பட்டது. நாட்டில் பெரும்பான்மையான மக்கள் வளர்ச்சி அரசியலை நோக்கி திரும்பியுள்ளனர். வரும் காலங்களிலும் உ.பி., உள்ளிட்ட மாநில மக்கள், தங்கள் மாநில நலனுக்காக வளர்ச்சி அரசியலுக்கு ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கையுள்ளது.

நாகரீ்கமான சமுதாயத்தில், தலித்கள் மீதான தாக்குதல் போன்ற சம்பவங்களுக்கு இடமில்லை. சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசுக்கு உட்பட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை விட பா.ஜ., ஆட்சியில் மதக்கலவரம் தலித்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறைந்துள்ளது.


குறிப்பிட்ட பிரச்னையை காரணம் காட்டி எனது பெயரை கெடுக்க சதி நடக்கிறது. மற்ற கட்சிகளை விட, பா.ஜ., சார்பில் அதிகளவு பழங்குடியினர் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தலித்கள், பழங்குடியினர், பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.

மீடியா மக்கள், டிஆர்பி.,க்காக போட்டியில் உள்ளனர். இதனால் தலைவர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனக்கூறினார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic