அமெரிக்காவில் அந்நாட்டு மக்கள் இஸ்லாமியர்களை அதிகம் வெறுப்பதாகவும், அவர்களுக்கு தங்களுடைய பிள்ளைகளை திருமணம் முடித்து கொடுப்பதில் விருப்பமில்லாதவர்களாக இருக்கின்றார்கள் என்பதாக கணக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கிறது.
அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைகழகத்தின் சமூகவியல் துறையின் சார்பாக கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. இதில் 2500 நபர்களிடம் எடுக்கப்பட்ட இந்த கணக்கெடுப்பில் 45.5% மக்கள் இஸ்லாமியர்களை வெறுப்பதாகவும், அவர்களுக்கு தங்களுடைய பிள்ளைகளை திருமணம் முடித்து கொடுப்பதற்கு விருப்பமில்லை எனவும் தெரிவித்துள்ளனர். 10 வருடங்களுக்கு முன் வெறும் 26% ஆக இருந்த இந்த புள்ளி விபரம் தற்போது 2016 ஆம் ஆண்டில் 1 மடங்கு உயர்ந்து 45% எட்டியுள்ளது.
நாட்டின் மீது அச்சுறுத்தல், உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாகவே இந்த மனப்பாங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மதத்தின் அடிப்படையில் ஒரு மனிதனை இலகுவாக அமெரிக்க மக்கள் எடைபோட்டுவிடுவதாக டக்லஸ் ஹர்ட்மன் என்ற சமூகவியல் நிபுணர் தெரிவித்துள்ளார். ஆனால் இஸ்லாமியர்கள் விவகாரத்தில் இது மேலும் சிக்கலை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2001ஆம் ஆண்டு இரட்டை கோபுரம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிறகு இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் அமெரிக்காவில் அதிகரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அமெரிக்காவில் வசிக்கும் சீக்கிய மக்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சீக்கியர்களை இஸ்லாமியர்கள் என தவறாக நினைத்து அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இஸ்லாமியர்களுக்கு அடுத்தபடியாக அதிகம் வெறுக்கப்படும் நபர்களாக நாத்திகர்கள் இருக்கிறார்கள். 41.9% மக்கள் நாத்திகர்களை வெறுப்பதாக அந்த கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.

No comments:
Write comments