Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 18, 2016

டுவின் டவர் இடிக்கப்பட்ட இடத்தில் இயேசு நாதர் உருவம்...?


அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மைய கோபுரத்தின் மீது ஏசுநாதர் உருவம் தோன்றியதாக தகவல் வெளியானதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு  110 அடுக்கு மாடிகளை கொண்ட இரட்டைக் கோபுரங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 3000 பேர் பலியாகினர். இந்த தாக்குதலில் பலியானவர்களின் நினைவு தினம் கடந்த 11ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஒபாமா, ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற நிகழ்வை ரிச் மிக்ரொமக் என்ற புகைப்படக்காரர் தனது காமிராவில் படம் பிடித்தார்.

அப்போது கீழே இருந்து சென்ற ஒளியின் உச்சத்தில் வெள்ளையாக ஒரு உருவம் தெரிந்துள்ளது. இந்த உருவம் ஏசுநாதர் உருவம் போன்றும் தெரிந்துள்ளது. இதுகுறித்து அந்த புகைப்படக்காரர் கூறும் போது நான் பல புகைப்படங்கள் எடுத்தேன்.

ஆனால் இந்த ஒரு புகைப்படத்தில் மட்டும் ஏசுநாதர் உருவம் தெரிவது வியப்பாக உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic