Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 18, 2016

பாக் முன்னாள் அதிபர் முஷாரஃபின் சொத்துக்கள் முடக்கம்!


பாகிஸ்தானில் மதகுரு கொலை வழக்கு விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முஷாரப் அதிபராக இருந்தபோது 2007ம் ஆண்டு லால் மசூதிக்குள் இராணுவம் புகுந்து தீவிரவாதிகளை வேட்டையாடியது. இந்த மோதலில் மதகுரு அப்துல் ரஷீத் காஜி கொல்லப்பட்டார். இந்த படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைக்கு முஷாரப் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.

இந்நிலையில் இவ்வழக்கு இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் செசன்ஸ் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது முஷாரப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பதில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி நிராகரித்தார். அத்துடன், விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால் முஷாரப்பின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார். முஷாரஃப் தனது இராணுவ ஆட்சியை இழந்த பிறகு துபாய் நாட்டிற்கு தப்பிச்சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை பாகிஸ்தானிற்கு அழைத்துவ்நாடு கடத்தி அவர் மீது தொடுக்கப்பட்டுள்ள் அ அனைத்து வழக்குகளில்ளையும் விசாரிக்க பாகிச்த்ஸ்தான் அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. 

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic