Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 16, 2016

தூத்துக்குடி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி!



திண்டுக்கல் அணிக்கு எதிரான டி.என்.பி.எல்., அரையிறுதியில் அசத்திய துாத்துக்குடி அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.

தமிழக பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) தொடரின் முதல் சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று முடிவில் முதல் நான்கு இடம் பிடித்த சேப்பாக்கம், திண்டுக்கல், துாத்துக்குடி, கோவை அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இன்று திருநெல்வேலியில் நடந்த முதல் அரையிறுதியில் துாத்துக்குடி பேட்ரியாட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற துாத்துக்குடி அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் 'பேட்டிங்' தேர்வு செய்தார்.

துாத்துக்குடி அணிக்கு கவுசிக் காந்தி (9) ஏமாற்றினார். முருகன் அஷ்வின் 'சுழலில்' நாதன் (11) சிக்கினார். பின் இணைந்த அபினவ் முகுந்த், தினேஷ் கார்த்திக் ஜோடி அதிரடியாக விளையாடியது. ரகுநாத் வீசிய 14வது ஓவரில் 3 பவுண்டரி அடித்த தினேஷ் கார்த்திக் 48 ரன்கள் எடுத்தார். நடராஜன் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய அபினவ் முகுந்த் அரை சதம் கடந்தார். இவர் 55 பந்தில் 91 ரன்கள் எடுத்தார். சன்னி குமார் பந்துவீச்சில் ஆனந்த் (7), வாஷிங்டன் சுந்தர் (4) சிக்கினர். முடிவில், துாத்துக்குடி அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 187 ரன்கள் எடுத்தது. அஷ்வின் கிறிஸ்ட் (1) அவுட்டாகாமல் இருந்தார்.

கடின இலக்கை விரட்டிய திண்டுக்கல் அணிக்கு வாஷிங்டன் சுந்தர் தொல்லை தந்தார். இவரது பந்துவீச்சில் ரகுநாத் (7), விக்டர் (0), கங்கா ஸ்ரீதர் (௦) சிக்கினர். பின் இணைந்த ஜெகதீசன், வெங்கட்ராமன் ஜோடி அதிரடியாக ரன் குவித்தது. ஜெகதீசன் 59 ரன்கள் விளாசினார். வெங்கட்ராமன் 40 ரன்களில் வெளியேறினார். கேப்டன் சுப்ரமணிய சிவா (3) நிலைக்கவில்லை. பின் வந்தவர்கள் ஏமாற்ற, திண்டுக்கல் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 149 ரன்கள் மட்டும் எடுத்து வீழ்ந்தது. இதன் மூலம், துாத்துக்குடி அணி பைனலுக்குள் நுழைந்தது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic