Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 16, 2016

இந்து மக்கள் கட்சி சார்பில் ரஜினிக்கு உப்பு பார்சல்..!


காவேரி பிரச்சனையில் தமிழர்கள் மீது கடும் தாக்குதல் நடத்துவதை கண்டிக்காத நடிகர் ரஜினிகாந்திற்கு இந்து மக்கள் கட்சி உப்பு பார்சல் அனுப்பியுள்ளது.

காவேரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடவேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து கர்நாடகத்தில் பெரும் வன்முறை வெடித்தது. தமிழர்கள் மீது குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டதோடு தமிழர்களும் அம்மாநிலத்தை விட்டு வெளியேற துவங்கினர். இது மட்டுமல்லாது 40ற்கும் மேற்பட்ட தமிழகத்தை சேர்ந்த பேருந்துகள் எரித்து சாம்பலாக்கப்பட்டது.

இதனை அடுத்து பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் கர்நாடகத்தில் பிறந்து தமிழகத்தில் மாபெரும் நட்சத்திரமாக இருக்கும் ரஜினிகாந்த் இவ்விவகாரத்தில் தனது கண்டனத்தை தெரிவிப்பார் என அனைத்து தரப்பினராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை ரஜினி தனது தரப்பிலிருந்து எந்த ஒரு கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை.

பிரச்சனை இவ்வளவு தூரம் சென்றும் ரஜினி எந்த கண்டனத்தை தெரிவிக்காத நிலையில் அவரை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் உப்பு பார்சல் மூலம் அனுபப்பட்டது. சூடு சொறனை இருக்கா...? சோற்றிலு உப்பு போட்டுத்தான் திங்குறீங்களா...? அப்படி இல்லை என்றால் இதோ உப்பு.." என்கிற அர்த்தத்தில் இந்த வினோத செயலில் இந்துமக்கள் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். இதனை ரயில்வே பார்சல் மூலமாக அனுப்பி இருப்பதாக அந்த கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic