மும்பையில் இயேசு கிறிஸ்துவின் சிலை சேதப்படுத்தப்பட்டதால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
மும்பையிலுள்ள ஜுஹு தாரா ரோட்டில் அமைந்திருந்த இயேசு கிறிஸ்துவின் சிலையை இன்று காலை சில மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளார்கள். தாரா ரோட்டில் ஆஷா காலனி அருகே சிலுவையில் இருந்த இயேசு கிறிஸ்துவின் சிலை சேதப்படுத்தப்பட்டிருக்கிறது.
நிகோலஸ் அல்மேய்டா என்ற நாய்கள் காப்பகத்தில் பணி புரியும் ஒருவர் கூறும்போது "இச்சம்பவம் அதிகாலை நடந்திருப்பதாக தெரிகிறது. எனினும் சிலை உடைக்கப்பட்டதற்கான ஆதாரங்களை அழிப்பதற்காக சான்டா குறூஜ் பகுதி காவல் நிலையத்தின் காவலாளிகள் உடைக்கப்பட்ட சிலையின் பாகங்களை அப்புறப்படுத்தினர்." என தெரிவித்தார்.
இதனை அடுத்து இக்காப்பகத்தினை சேர்ந்த ஏராளமானவர்கள் காவல் நிலையத்தின் முன்பாக நின்று சிலையை உடைத்த மர்ம நபர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமென கோஷமிட்டனர். மேலும் சிலையின் பாகங்களை எடுத்துச்சென்ற போலிஸாரின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். வாட்டிகனில் அன்னை தெரசாவிற்கு புனிதர் பட்டம் வழங்கப்படும் இன்றைய தினத்தில் நடைபெற்ற இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:
Write comments