காஞ்சி சங்கராச்சாரியாரின் உடல் நிலை சீரானதால், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யபப்ட்டார்.
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் விஜயவாடாவில் உள்ள ஆசிரமத்தில் வைத்து கடந்த 30ஆம் தேதி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டிருந்தார்.
ஜெயேந்திரருக்கு இரத்தத்தில் சர்க்கரை மற்றும் சோடியம் அளவு வேகமாக குறைந்ததால் அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு என்.டி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டி.ரவிராஜு மேற்பார்வையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். மேலும் வழக்கமாக சிகிச்சையளிக்கும் சென்னையை சேர்ந்த டாக்டர் குழுவும் அங்கு சென்று அவரது உடல்நிலையை கண்காணித்தனர்.
இந்த சிகிச்சை மூலம் ஜெயேந்திரர் வேகமாக குணமடைந்ததால் பின்னர் சாதாரண அறைக்கு மாற்றப்பட்டார். தற்போது பூரண சுகமடைந்துள்ள அவர் இன்று மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார். அங்கிருந்து அவர் மீண்டும் விஜயவாடாவில் உள்ள ஆசிரமத்துக்கு சென்றார்.

No comments:
Write comments