Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 1, 2016

ஆர்.எஸ்.எஸ் தொட்பான கருத்தில் உறுதியாக இருக்கிறேன்! - ராகுல்



காந்தி கொலை செய்யப்பட்டது தொடர்பாக தான் தெரிவித்த கருத்தில் உறுதியாக உள்ளதாகவும், மன்னிப்பு கேட்க முடியாது எனவும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலம், தானேவில், 2014ல் நடந்த, லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் பேசிய, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் மகாத்மா காந்தியை கொன்றது, ஆர்.எஸ்.எஸ் அமைப்புதான் என்றார். இதை கண்டித்து தானே மாவட்ட ஆர்.எஸ்.எஸ் செயலர் ராஜேஷ் குண்டே அங்குள்ள பிவான்டி கோர்ட்டில் ராகுல் மீது அவதுாறு வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம் விசாரணைக்கு ஆஜராகும்படி ராகுல் காந்திக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் ராகுல் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவையும் நீதிமன்றம் நிராகரித்தது. உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆர்.எஸ்.எஸ் குறித்து பேசியதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டால், வழக்கை முடித்துக் கொள்ளலாம் என அறிவித்தது. ஆனால் ராகுல் தரப்பில் இந்த யோசனையை நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் விசாரணைக்கு தடை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை ராகுல் திரும்ப பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தனது கருத்தில் உறுதியாக இருப்பதாகவும்,  அதிலிருந்து பின்வாங்கும் பேச்சுக்கு இடமில்லை. மன்னிப்பு கேட்க மாட்டேன் எனவும் இந்த வழக்கில் விசாரணைக்கு தயாராக உள்ளதாக கூறினார். இதனையடுத்து ராகுல் மீதான அவதூறு வழக்கு மீதான விசாரணை கீழ் கோர்ட்டில் நடைபெற உள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic